தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்பு - தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் இன்று (மே.10) பொறுப்பேற்றுக் கொண்டார்.

senior advocate shanmugasundaram
senior advocate shanmugasundaram

By

Published : May 10, 2021, 4:29 PM IST

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து முந்தைய அரசு தலைமை வழக்கறிஞரான விஜய் நாராயண் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்க நேற்று முன் தினம் (மே.08) ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

ஆர். சண்முகசுந்தரம் 1953ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தார். இவரது தந்தை எஸ். ராஜகோபால் மதுரை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்தவர் ஆவார்.

தன் சட்டப் படிப்பை முடித்துவிட்டு 1977ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்த சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன், தன் தந்தை எஸ்.ராஜகோபால் ஆகியோரிடம் ஜூனியராகப் பணியாற்றினார். இவர் ஏராளமான சிவில், கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதம் செய்துள்ளார். சட்டத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.

1989ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை மாநிலத் தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட இவர், 2002ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

2015-2017ஆம் ஆண்டு காலத்தில் மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவராக இருந்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, ஊழல் மற்றும் குற்ற வழக்குகளை நடத்திய இவர், தமிழ்நாடு அரசு, சிபிஐ, ரயில்வே தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு தலைமை வழக்கறிஞருக்கான அறையில் முறைப்படி இன்று (மே.10) ஆர். சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க:சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று!

ABOUT THE AUTHOR

...view details