தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஹாக்கி ஆட்டம் பின்னர் பொதுத் தேர்வு பற்றி கருத்து' - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி மற்றும் வாலிபால் போட்டிகளை பள்ளிக் கல்வித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் கோப்பை - ஹாக்கி ஆட்டம் பின்னர் பொதுத் தேர்வு பற்றி கருத்து
முதலமைச்சர் கோப்பை - ஹாக்கி ஆட்டம் பின்னர் பொதுத் தேர்வு பற்றி கருத்து

By

Published : Feb 27, 2020, 2:25 PM IST

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி மற்றும் வாலிபால் போட்டியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். விளையாட்டில் பங்குபெறும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், விளையாட்டை தொடங்கி வைக்கும் விதமாக பலூன்களை பறக்கவிட்டார். வாலிபால் வீரருக்கு வாலிபால் வழங்கியும், ஹாக்கி விளையாட்டு வீரருக்கு ஹாக்கி மட்டையை வழங்கியதோடு தானும் விளையாடி போட்டியைத் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் 37 மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இப்போட்டி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மார்ச் ஒன்றாம் தேதி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் கோப்பை - ஹாக்கி ஆட்டம் பின்னர் பொதுத் தேர்வு பற்றி கருத்து

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பதட்டம் அடையாமல் இருக்க 3.15 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். பொதுத்தேர்வு நடைபெறும் இடங்கள், தேர்வு மையங்கள், வினாத்தாள்கள், விடைத்தாள்கள் இருக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுவார்கள். 2012- 2017 வரை (2015-2016 ஆகிய ஆண்டுகள் தேர்வு நடைபெறவில்லை) ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு என்பது ஒரு பெயரில்லா மொட்டை கடிதம், நாங்கள் ஆய்வு செய்தபோது தவறு நடைபெறவில்லை நீதிமன்றத்திலும் இதையே சொல்லியிருக்கிறோம், அந்தக் கடிதத்தையும் கொடுப்போம். முதுகலை ஆசிரியர் தேர்வில் தவறுகள் நடக்கவில்லை, எல்லாம் அரசியல் காரணத்துக்காக தேர்தல் நேரத்தில் இதுபோன்ற புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details