தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செம்மொழி விருது கோரிய வழக்கு: இது அரசியல் முடிவு என தள்ளுபடி செய்த நீதிமன்றம் - தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற அந்தஸ்து

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் 'கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கப்பட்ட விருதுகளை மீண்டும் வழங்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Mar 3, 2021, 10:56 PM IST

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை மீண்டும் வழங்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று 2004ஆம் ஆண்டு தமிழ் மொழிக்குச் செம்மொழி என்கிற அந்தஸ்து வழங்கப்பட்டது. 2008இல் சென்னையிலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் தொடங்கப்பட்டது.

அப்பொழுது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அந்த நிறுவனத்திற்குத் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை வழங்கி, அந்த நிதியின் மூலமாகத் தமிழ்நாடு வரலாற்றின் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு 'கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக 2010ஆம் ஆண்டு வரை விருதுகள் வழங்கப்பட்டுவந்ததாகவும், அதன்பின் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தபின் அந்த விருதுகள், வழங்கப்படவில்லை எனவும், அந்த விருதுகளை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி, மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இது அரசியல் முடிவு- சென்னை உயர் நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இது அரசியல் முடிவு எனவும், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details