சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டுத்துறை நடத்தி வருகிறது. இதில், தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பொறியியல் கல்லூரியின் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் தொகை குறித்த செலவு கணக்கினை பல கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கவில்லை என தெரிகிறது. அதேபோல், மாணவர்களிடம் வசூலித்த தேர்வு கட்டணத்தையும் சில கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தில் செலுத்தாதவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்தக் கல்லூரிகளின் தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத தனியார் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான 3, 5 மற்றும் 7வது செமஸ்டர் தேர்வு நேற்று (மார்ச்.13) வெளியிடப்பட்டது. இதில், மாணவர்களின் தேர்வு கட்டணம், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கும் தொகை குறித்த செலவு கணக்கு உள்ளிட்டவற்றை முறையாக அளிக்காத கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் சில பொறியியல் கல்லூரிகளின் பருவத் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.