சென்னை: தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கே.என். செல்வகுமாரை மூன்று வருட காலத்திற்கு நியமித்துள்ளார்.
இவர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக 32 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் தொழில்நுட்ப கண்காணிப்புக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமனம் இவர் 84 ஆய்வுக் கட்டுரைகளையும் மூன்று புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி, தொலைதூரக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தில் சுமார் 22 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.
பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மேலும், சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.