சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அங்கு குறைந்த விலை வெங்காய விற்பனையை தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்துவரும் மழையால் இங்கு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டிலும் மழை காரணமாக 100 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்தது.
மகாராஷ்டிரா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் வெங்காயத்தை அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நாம் தற்போது லாரிகளில் கொண்டுவந்து பண்ணை பசுமை கடைகளின் மூலம் 45 ரூபாய்க்கு விற்கிறோம். தொடர்ந்து விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் 'விலையை நிலைப்படுத்தும் நிதி' மூலமாக நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு மத்திய தொகுப்பின் மூலம் 36 ஆயிரம் மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளது. தற்போது ஆந்திராவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் அந்த வெங்காயம் மூன்று நாட்கள் மட்டுமே தாங்கும். ஆனால் மகாராஷ்டிரா வெங்காயம் 10 நாட்கள் தாங்கும். நிலையை சமாளிக்க ஆந்திரா வெங்காயம் 33 ரூபாய்க்கு பண்ணை பசுமை கடைகளில் விற்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க : சென்னையில் காலை முதலே பரவலாக மழை! - வாகன ஓட்டிகள் அவதி!