சென்னை:பல்லாவரம் அடுத்த திரிசூலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார், திரிசூலம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ராணி அண்ணா நகர் தெருவில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் திரிசூலத்தை ேர்ந்த முனுசாமி (23),பழைய பல்லாவரத்தை சேர்ந்த வினோத் குமார் (23) மற்றும் மோகன் (24) ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை கடத்தி வந்து சிறிய பொட்டலங்களாக பிரித்து விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.