தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணிகளின் புகார்களுக்கு உதவ முன்வரும் 'செக்வே' தானியங்கி வாகனம்!

சென்னை: ரோந்து பணிகளில் ஈடுபடும் போக்குவரத்து காவல்துறையினருக்கு செக்வே என்ற தானியங்கி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

check way scooter
check way scooter

By

Published : Nov 26, 2019, 11:13 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் அளிக்கும் புகாரை உடனடியாக நேரில் சென்று தீர்வு காணும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை, காவல்துறைக்கு செக்வே என்ற தானியங்கி வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து காவல்துறையினருக்கும் ரோந்து பணிகளில் பயன்படுத்தும் வகையில் செக்வே தானியங்கி வாகனத்தை காவல்துறை அறிமுகப்படுத்தவுள்ளனர். இந்த வாகனத்தை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டத்தின் கீழ் சென்னை பாண்டி பஜாரில் சில தினங்களுக்கு முன் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதேபோன்று இந்த செக்வே வாகனத்தை அங்கு பயன்படுத்த போக்குவரத்து காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

செக்வே தானியங்கி வாகனம்

தி.நகரில் வரும் பயணிகளின் கூட்டநெரிசலை பயன்படுத்தி கொள்ளையடிப்பதை தடுப்பதற்காக இந்த வாகனத்தை பயன்படுத்தவுள்ளனர். மெரினா கடற்கரையில் உள்ள பார்க்கிங் வசதி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கும் இந்த வாகனத்தை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தானியங்கி வாகனத்தை இயக்க உதவும் ரிமோட் கன்ட்ரோல்

சென்னையில் முதற்கட்டமாக மூன்று தானியங்கி வாகனங்களை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மைக், விளக்கு போன்ற கருவிகளை உள்ளடக்கியது. பொதுமக்கள் வழங்கும் புகாருக்கு உடனடியாக நேரில் சென்று தீர்வு காண வழிவகுக்கும் என்கின்றனர்.

இந்தத் தானியங்கி வாகனத்தின் சோதனை ஓட்டம் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி வளாகத்தில் 520 மரக்கன்றுகளை நட்ட முன்னாள் மாணவர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details