தமிழ்நாடு நீதித் துறை பணியில் அடங்கியது, உரிமையியல் நீதிபதி பதவி. இதனுடைய முதன்மை எழுத்துத் தேர்வு, கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப்பு வெளியிட்டுள்ளார். அந்தச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நீதித் துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப்பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, மார்ச் மாதம் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு கரோனா வைரஸ் தொற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.