தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையை மிரட்டும் கரோனா! - dissinfectant spray on corona affected area

சென்னை: தாம்பரம் அருகே எட்டு வயது சிறுவனுக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனை மற்றும் சிறுவன் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதிகள் முழுவதையும் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

கிருமி நாசினி தெளிக்கும் நகாராட்சி ஊழியர்கள்
கிருமி நாசினி தெளிக்கும் நகாராட்சி ஊழியர்கள்

By

Published : Apr 29, 2020, 1:13 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில், சென்னை மாநகராட்சியில் தான் கரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள கணேஷ் நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த எட்டு வயது சிறுவனுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறுவன் வசித்து வந்த குடியிருப்புப் பகுதிகளிலும், சிகிச்சைப் பெற்று வந்த பெதஸ்தா மருத்துவமனையில் ஏழு செவிலியர், இரண்டு மருத்துவர்கள் உள்பட 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிய, அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

கிருமி நாசினி தெளிக்கும் நகராட்சி ஊழியர்கள்

இதனையடுத்து சிறுவன் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதி, பரிசோதனை செய்த தனியார் மருத்துவமனை உள்ளிட்டப் பகுதிகளில் நகராட்சிப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் பார்க்க: கர்நாடக பசுமை மண்டலங்களில் கடைகள் திறக்க அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details