சென்னை பழைய விமான நிலையம் சரக்கக பகுதியிலிருந்து சிங்கப்பூா் செல்லும் சரக்கு விமானம் இன்று (பிப்.10) காலை புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் ஏற்ற வந்திருந்த சரக்கு பாா்சல்களை சுங்கத்துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, சென்னையில் உள்ள (ஓம் ஶ்ரீ சாய்) என்ற ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்ப பெரிய பாா்சல்கள் வந்திருந்தன.
அந்த பாா்சல்களில் 600 பெட் சீட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அந்த பாா்சல்களை பிரித்து பார்த்தனா். அதில், பெட் சீட்களுக்கிடையே 25 செம்மரக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.