சென்னை:கோயம்பேட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று (ஜூன் 29) திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் ராசயனம் பவுடர் கலந்து பழுக்கவைக்கப்பட்ட 7 டன் மாம்பழங்கள் மற்றும் 500 கிலோ வாழைப் பழங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், “சென்னை கோயம்பேட்டில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் எத்திலின் ரசாயன பவுடர் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 7 டன் மாம்பழங்கள் மற்றும் 500 கிலோ வாழை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த பழங்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலிருந்து காயாக கொண்டு வரப்பட்டு அதில் ரசாயனங்கள் தெளிக்கப்படுகிறது. 6 கடைகளில் ரசாயனங்கள் வைத்து பழங்களை வைத்திருந்த வியாபாரிகள் மீது முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.