தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரேபிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.3 கிலோ தங்கப்பசை பறிமுதல்

சென்னைக்கு துபாய் மற்றும் அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60.5 லட்சம் மதிப்புடைய 1.3 கிலோ தங்கப்பசையை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

அரேபிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.3 கிலோ தங்கப்பசை பறிமுதல்
அரேபிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.3 கிலோ தங்கப்பசை பறிமுதல்

By

Published : Oct 10, 2022, 1:04 PM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை, வழக்கம்போல் சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனை செய்தனா். அப்போது சென்னையைச்சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.

எனவே, அவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப்பேசியுள்ளார். இதனையடுத்து சுங்க அலுவலர்கள், அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த மூன்று பார்சல்களை கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த பார்சலுக்குள் 690 கிராம் தங்கப்பசை இருந்துள்ளது. இதன்மதிப்பு ரூ.30.5 லட்சம் ஆகும். இதனையடுத்து தங்கப்பசையை பறிமுதல் செய்த சுங்க அலுவலர்கள், சென்னை பயணியை கைது செய்தனர்.

அதேபோல் அபுதாபியில் இருந்து எத்தியாடு ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த சிவகங்கை பயணி மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய 685 கிராம் தங்கப்பசையை சுங்க அலுவலர்கள் கைப்பற்றினா்.

இதனையடுத்து சிவகங்கை பயணியை சிவகங்கை அலுவலர்கள் கைது செய்தனர். இவ்வாறு அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.60.5 லட்சம் மதிப்புடைய 1.3 கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பரந்தூரில் விவசாய நிலங்களைத்தவிர்த்து மற்ற இடங்களில் விமான நிலையம் அமைக்கலாம் - பூவை.ஜெகன்மூர்த்தி

ABOUT THE AUTHOR

...view details