சென்னை: கடந்த சில நாட்களாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினரும் சோதனை வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் யானைக்கவுனி போலீசாருக்கு மின்ட் தெருவில் சந்தேகத்திற்கிடமான வகையில் நபர் நின்று கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்திற்கிடடமான நபர் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது அந்த நபர் சௌகார்பேட்டையை சேர்ந்த ஸ்வரூப் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் சந்தேகத்தின் பேரில் அவரது உடைமைகளை சோதனை செய்த போது, அவர் வைத்திருந்த பையினுள் 20 லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரியவந்துள்ளது.