தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு - சென்னை விமான நிலையம்

பிரதமா் மோடி சென்னைக்கு இரண்டு நாட்கள் பயணமாக வருவதையொட்டி, சென்னை விமானநிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

மோடியின் வருகையால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
மோடியின் வருகையால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

By

Published : Jul 25, 2022, 7:11 PM IST

சென்னை:பிரதமர் மோடி, 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக, இரண்டு நாட்கள் பயணமாக வரும் வியாழன் (ஜூலை 28) மாலை குஜராத்திலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் அன்று மாலை, 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி வைத்த பிறகு கிண்டி ராஜ் பவனில் இரவு தங்குகிறாா்.

மறுநாள் வெள்ளிக்கிழமை(ஜூலை 29) கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 42ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பின்பு அன்று மதியம் பிரதமர் தனி விமானத்தில் குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரான எஸ்பிஜி குழுவினா் சுமாா் 60 பேர் டில்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்துள்ளனா்.

அவா்கள் சில குழுக்களாகப் பிரிந்து விமான நிலையம் நேரு உள்விளையாட்டு அரங்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், பிரதமரின் ஹெலிகாப்டா் தரையிறங்கும் ஐஎன்எஸ் அடையாறு ஆகிய இடங்களில் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா் .

இன்று (ஜூலை 25) பகல் 12 மணிக்கு கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி சிறப்பு ஆலோசனை கூட்டத்தை, எஸ்பிஜி உயா் பாதுகாப்பு படை அதிகாரிகள் நடத்தினர். இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏஎஸ்எல் எனப்படும் சிறப்பு ஆலோசனை கூட்டத்தை டெல்லி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் நடத்தினர்.

இதில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை, விமான பாதுகாப்பு படை, விமான நிலைய உயா் அதிகாரிகள், சென்னை மாநகர உயா் போலீஸ் அதிகாரிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெற்று அலோசிக்கப்பட்டது. இம்முறை பிரதமர் சென்னை விமான நிலைய விவிஐபி லவூஞ்சில் சுமார் முக்கால் மணி நேரம் ஓய்வெடுக்கிறார்.

7 அடுக்கு பாதுகாப்பு:அந்த நேரத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. பிரதமரை வரவேற்க எத்தனை பேருக்கு பாஸ்கள் வழங்குவது? அவரை சந்திப்பதற்கு யாருக்கெல்லாம் அனுமதி கொடுப்பது? போன்றவைகளும் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.

மோடியின் வருகையால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் பிரதமா், சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் வரை சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு கடுமையாக இதுவரை இல்லாத அளவு அதிகரிக்கபடுகிறது. சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை பழைய விமான நிலை முழுவதும் டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பழைய விமான நிலையத்திற்கு முறையான அனுமதி இன்றி யாரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பணியாளர்களுக்கு அனுமதி இல்லை: பழைய விமான நிலைய வளாகத்தில் காா்கோ, கொரியா், வெளிநாட்டு அஞ்சலகம் எனப்படும் பாரீன் போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களில் தற்காலிக பணியாளா்களுக்கு அனுமதி இல்லை. நிரந்த ஊழியா்கள் முறையான அனுமதி பெற்று உரிய அடையாள அட்டையை அணிந்து கொண்டு வர வேண்டும்.

மேலும், பழைய விமானநிலைய பகுதிகளில் ரன்வே பராமரிப்பு தற்காலிக ஒப்பந்த பணியாளா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. விமானநிலைய நிரந்த பணியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை வரையில் அமுலில் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: மின்சார மீட்டரின் வாடகை கட்டணத்தை மக்கள் மீது திணிப்பது நியாயமல்ல - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details