சென்னை வெலிங்டன் சீமாட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதில், பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக சிறுமிகளின் காவடி ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சைக்கிள், விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "ஏழு பேர் விடுதலையில் மாநில அரசின் நிலை என்பது, ஜெயலலிதா ஆட்சியில் எடுத்த அதே நிலைப்பாடுதான். தமிழ்நாடு மக்களின் உணர்வை தெரிவிக்கும்வகையில் ஆளுநரை சந்திக்கும்போது பலமுறை இதுபற்றி முதலமைச்சர் தெரிவித்துவருகிறார்.
மாணவிகளின் கலைநிகழ்ச்சியைக் கண்டுகளித்த அமைச்சர் ஜெயக்குமார் எங்களைப் பொறுத்தவரை ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நளினியை தவிர எவரையும் விடுதலை செய்யக் கூடாது எனக் கடிதம் எழுதினார். ஆனால் இப்போது திமுக இரட்டை வேடம் போடுகிறது. இதுவரை வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று சட்டமே கிடையாது. இப்போது இயற்றப்பட்ட பிறகு இது குறித்து பல கருத்துகளைக் கூறுகிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: பாஜகவின் பாவச்செயல்களுக்கு அதிமுக பலியாக நேரிடும் - திருமா எச்சரிக்கை