சென்னை: தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கிய தினமாக திகழும் தைப்பூச திருநாளான இன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று திருத்தேர்களில் கோயிலை சுற்றிலும் உலா வரும்.
இந்நாளில் காவடி, பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்து முருக கடவுளை வழிப்பட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை ஆதிகாலம் தொட்டே இருந்து வருவதால், இந்நாளில் பக்தர்கள் பலரும் விரதமிருந்து காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக நடந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.
பலரும் தைப்பூச திருநாளுக்கு முந்தைய தினமே பாதயாத்திரையாக நடந்து வந்து கோயிலில் காத்திருந்து அதிகாலையில் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தையும் திருத்தேர் உலாவையும் காண்பர். ஆனால் இந்த வருடம் தைப்பூசத் திருவிழா கரோனா வைரஸ் பாதிப்பு பரவல் காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது.
இந்நிலையில், தைப்பூச விழா தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றி! போற்றி!" என்று நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்புக்கான பாசறையான வீரத்தமிழர் முன்னணி தெரிவித்துள்ளது.