இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அஞ்சல் துறைத்தேர்வுகள் தமிழ் உள்பட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2016 - 17 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் துறைத் தேர்வில் மோசடி தொடர்பாக மத்தியப் புலனாய்வு விசாரணை நடைபெற்றது. பின்னர் நீதிமன்றம் உத்தரவுப்படி தேர்வுகள் மாநில மொழிகளில் நடைபெறும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதியளித்தது. ஆனால் அந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிட்டது மத்திய அரசு.
கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழைக் கற்க நிபந்தனை எனத் தமிழ்மொழியை இழிவுபடுத்தும் மத்திய அரசின் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.