சர்வதேச நாடாளுமன்ற அமைப்பின் சார்பாக செர்பியாவில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு இந்தியா சார்பில் சென்ற தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்ற பொதுக்கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் என்னை அனுப்பிய சபாநாயகருக்கும், தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து அநாகரீகமானது.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று ராமதாஸ் கூறியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி. அவர் கூறும் கருத்துக்கள் ஆதாரமற்றவை, அவரிடம் ஆதாரமிருந்தால் அதை நிரூபிக்கட்டும்.
முரசொலி அலுவலகம் எப்படி உருவாக்கப்பட்டது, எப்போது உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றி மக்கள் அனைவருக்கும் தெரியும். ராமதாஸ் கூறியதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை' என்று தெரிவித்தார்.
மேலும் படிங்க: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோள்: வைகோ குற்றச்சாட்டு