சென்னை:மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 30ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய சீமான், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் எனக் குறிப்பிட்டார். சீமானின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
சீமானின் இந்தப் பேச்சுக்கு பேராசிரியர் அருணன், வசந்திதேவி, திரைப்பட நடிகை ரோஹிணி உள்படப் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட நட்புக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் (ஆகஸ்ட் 2) காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.