தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவை விட திமுக ஆபத்தானது... சீமான் விமர்சனம் - The eight lane road issue

பாஜகவை விட திமுக ஆபத்தானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

பாஜகவை விட திமுக ஆபத்தானது... சீமான் விமர்சனம்
பாஜகவை விட திமுக ஆபத்தானது... சீமான் விமர்சனம்

By

Published : Aug 28, 2022, 7:59 PM IST

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சாந்தன், முருகன் உள்ளிட்ட 3 தமிழர்களை தூக்கில் இடக்கூடாது எனக்கோரி கடந்த 2011ஆம் ஆண்டு செங்கொடி என்கிற பெண் தீக்குளித்து உயிரிழந்தார்.

இந்நிலையில் செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவுநாள் சென்னை சின்னப்போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செங்கொடி படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "பாரதிய ஜனதா தங்களுக்குச் சாதகமான குற்றவாளிகளை மட்டுமே எளிதில் விடுதலை செய்கிறார்கள். எழுவரை விடுதலை செய்ய மாட்டோம் என காங்கிரசை விட அதிகமாக உறுதியாக இருக்கிறார்கள்.

நிரந்தர முதலமைச்சர் என யார் வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம், அப்படி ஒன்று உலக வரலாற்றிலேயே இல்லை. நிச்சயம் ஒருநாள் ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும். ஏன் கேரளாவில் இருந்து செல்லும் மீனவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஏனென்றால் அங்குள்ள அரசு அந்த அளவிற்கு வலிமையாக உள்ளது.

அதேபோல் எந்த கட்சி 7 பேர் விடுதலையை செய்யக் கூடாது என்று சொல்லுகிறதோ, அவற்றோடு இங்குள்ள கட்சிகள் கூட்டணியில் உள்ளது. அதனால் வாய் திறக்காமல் மௌனமாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி எதை கண்டும் நாங்கள் அஞ்சமாட்டோம் என்பதால் தான், அனைத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம். மக்கள் எங்களுக்கு வாக்கு அளிக்கவில்லை என்றாலும் கவலை இல்லை, நாங்கள் வாக்குக்கானவர்கள் அல்ல, மக்கள் வாழ்க்கைக்கானவர்கள்.

எட்டு வழிச் சாலை விவகாரத்தில், எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொல்லுவது ஒன்று. ஆளுங்கட்சியாக இருக்கும் போது செய்வது ஒன்று. பாஜகவை விட திமுக ஆபத்தானது. பாஜக என்ன செய்யும், என்று நமக்கு நன்றாக தெரியும், ஆனால் திமுக எந்த நேரத்தில் என்ன வேடம் போடும் என்றே நமக்கு தெரியாது. புதியக்கல்வி கொள்கை என அனைத்திலும், இரட்டை வேடம் போடும் நடவடிக்கையை திமுக மேற்கொண்டு வருகிறது.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை தற்போது என்ன?. விமான நிலையத்தில் பறப்பதற்கே பயணிகள் இல்லாதபோது விமான நிலையம் எதற்கு?. மேலும் விளை நிலங்களை பறிப்பது தான் வளர்ச்சியா?, எது வளர்ச்சி என்று பேசவே அமைச்சர்களுக்கு தெரியவில்லை. அரசு புறம்போக்கு நிலங்களில் எத்தனை விமான நிலையங்கள் வேண்டுமானால் கட்டி கொள்ளுங்கள்.

ஆனால் விளை நிலத்தில் கை வைத்தால் நாங்கள் கேள்வி கேட்போம். அதானி இந்த விமான நிலையத்தை கட்டினால் கூடுதலாக போராடுவோம் என்பதால், அரசே விமான நிலையத்தை கட்டி அதானியிடம் அதனை ஒப்படைக்க உள்ளது. எனவே, எல்லா நிலமும் விளை நிலம் அல்ல, விளை நிலத்தில் உருவாக்க பல தலைமுறைகள் இரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்கள்.

அமைச்சர் துரைமுருகன் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சென்று பதவி வகிப்பவர்களை அப்படி இப்படி என்று மறைமுகமாக பேசுவதை விட செந்தில்பாலாஜி, சேகர் பாபு போன்றவர்களிடம் நேரடியாகவே பேசிவிடலாம். அவருக்கு முறையான அமைச்சர் பதவி குடிக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கும். உதயநிதி ஸ்டாலினை தலைவராக ஏற்று அவருக்கு சேவை செய்யும் போது, துரைமுருகன் சொல்வதை எவ்வாறு கேட்பார்கள்.

கட்சியை ஸ்டாலின் வழிநடத்திச் செல்லவில்லை கட்சி தான் அவரை எறும்பு போன்று அழைத்துச் சென்றது. கட்சியின் தலைவராக நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துகள்" என கூறினார்.

இதையும் படிங்க:கோயில் விழாவில் அதிக சக்தி வாய்ந்த எல்இடி விளக்குகள்... 100க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல்

ABOUT THE AUTHOR

...view details