சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சட்டப்பேரவைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டிடுகிறார். இந்நிலையில் திருவொற்றியூர் பகுதியில் சுங்கச் சாவடியில் இருந்து திறந்த வேனில் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவொற்றியூரில் வாக்கு சேகரிப்பு பணியில் சீமான் - chennai latest news
தான் போட்டியிடும் திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தான் போட்டியிடும் திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மார்க்கெட் தெரு, எழுத்துக்காரன் தெரு, மேற்கு மாட வீதி போன்ற பகுதிகளுக்கு சென்ற அவர், நாம் தமிழர் சின்னமான விவசாயி சின்னத்தில் வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் குழந்தைக்கு பெயர் சூட்டவும் செய்தார்.
இதையும் படிங்க :'பிரிவினை சக்திகளுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது' - அமித் ஷா குற்றச்சாட்டு