தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயத்தமாகும் 'நாம் தமிழர்' படை! - நாம் தமிழர் கட்சி

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

By

Published : Sep 3, 2021, 10:21 PM IST

சென்னை:இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில், "எதிர்வரவிருக்கும் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தலைமையில் இன்று (செப்டம்பர் 3) கட்சித் தலைமை அலுவலகத்தில் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குள்பட்ட அனைத்து மாவட்ட, தொகுதித் தலைவர்-செயலாளர்களும் பங்கேற்றனர். மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் முன்னிலை வகித்தனர்.

இக்கலந்தாய்வில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு அணியமாவது (ஆயத்தமாகுதல்) குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல்

இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு நாளையும் (செப்டம்பர் 4), விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாளும் (செப்டம்பர் 5) நடைபெறவிருக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்

இதையும் படிங்க: 'பசுமை தமிழகம் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டம்'

ABOUT THE AUTHOR

...view details