திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட விம்கோ நகர், பாரத் நகர், சுனாமி குடியிருப்பு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
’உண்மையில் நான்தான் பிக்பாஸ்’ - சீமான் பரப்புரை - seeman campaign in chennai proclaims himself as biggboss
சென்னை: பணம் கொடுக்காமலேயே தனக்கு இவ்வளவு கூட்டம் வருகிறது எனவும், உண்மையில் தான்தான் பிக்பாஸ் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "வருத்தம் தெரிவிப்பது மனித மாண்பு, இருப்பினும் இதுபோன்ற வார்த்தையை நான் என் அண்ணன் ராசாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. மிகப்பெரிய கல்வியாளர், வாசிப்பு பழக்கம் உடையவர், தன்மையாக பேசக்கூடியவர் தமிழ்நாடு முதலமைச்சர் வெல்லமண்டியில் வேலை செய்தார், குறைப்பிரசவத்தில் பிறந்தார் எனக் கூறுவதைக் கேட்டு அண்ணனா இப்படிப் பேசுகிறார் என்று அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு பண்பாடற்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கக்கூடாது. எத்தனை ஆண்டு காலம் அரசியலில் பயணித்தவர், சிறு தடுமாற்றம்தான் இது" என்றார்.
எச். ராஜாவையும் ஆ.ராசாயும் எக்காரணத்தைக் கொண்டும் ஒப்பிடக்கூடாது, என் நாட்டைக் கைப்பற்றாவிடில் வேறொருவர் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் உலகத்தில் பிச்சை எடுத்தாவது நான் நினைத்ததை செய்வேன். பணம் கொடுப்பதில்லை. 234 தொகுதிக்குமானாவன் நான்.
இதையும் படிங்க:’வரலாற்றுப் பிழையை மீண்டும் செய்யாதீர்கள், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாங்கள் இருக்கிறோம்’ - சீமான்
TAGGED:
சீமான் பிரச்சாரம்