தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைவி, குயின் தொடரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு - தலைவி

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி, குயின் தொடரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தலைவி மற்றும் குயின் தொடரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
தலைவி மற்றும் குயின் தொடரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

By

Published : Oct 15, 2020, 1:42 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் தலைவி என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல். விஜய், இந்தியில் ஜெயா என்ற பெயரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்துவருகின்றனர்.

இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தொடரை பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.

தங்களின் அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும் தடைவிதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 'தலைவி' திரைப்படத்தில் தன்னுடைய தந்தையை தவறாகச் சித்திரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என தீபா தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு மறுப்புத் தெரிவித்த பட நிறுவன தரப்பு, தலைவி படத்தின் கதையை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் தீபா பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகக் கூறியது.

இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 10, 11ஆம் தேதிகள் முழுமையாக விசாரித்து முடிக்கப்படும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details