தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குயின்' இணைய தொடருக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி! - குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், 'குயின்' இணைய தொடருக்கு தடைவிதிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Seeking stay for Queen web serious, orders reserved
Seeking stay for Queen web serious, orders reserved

By

Published : Dec 16, 2019, 4:26 PM IST


தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'குயின்' இணைய தொடருக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்ததைப் போல 'குயின்' இணைய தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்த மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மனுதாரரின் மனுவைப் பொறுத்தவரை படத்தை பார்த்து, அது கற்பனை கதையா என்பன உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்துதான் முடிவெடுக்க முடியும் என்றும் அதற்கு நான்கு வார கால அவகாசம் ஆகும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மோடி வாழ்க்கை வரலாற்று படத்தைப் பொறுத்தவரை, அவர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இந்த வழக்கில் அப்படி அல்ல. 2017ஆம் ஆண்டு வெளியான நாவலின் அடிப்படையில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உண்மை சம்பவங்களைத் தழுவிய கற்பனை கதையானதாகவும் இணைய தொடரின் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க...நீலகிரி அருகே பாரம்பரிய உடை அணிந்து பழங்குடியினர் வேட்பு மனு தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details