தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிதியுதவி வழங்குமாறு மீனவர்கள் கோரிய வழக்கு தள்ளுபடி - Fishermen requesting corona funding

சென்னை: மீனவர் குடும்பங்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா 500 ரூபாய் நிதியுதவி வழங்குமாறு தொடுக்கப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கரோனா நிதியுதவி வழங்குமாறு மீனவர்கள் கோரிய வழக்கு தள்ளுபடி
கரோனா நிதியுதவி வழங்குமாறு மீனவர்கள் கோரிய வழக்கு தள்ளுபடி

By

Published : May 30, 2020, 8:28 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தது. அதில், ‘கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், மீன் பிடிக்க சிறிய படகுகள் கூட அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் வருமானம் இல்லாமல், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ.500 வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மீன்பிடி தடை காலத்தில் தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.83 கோடியே 54 லட்சத்து 96ஆயிரம் வழங்கப்பட்டது. கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போது, மீனவர்கள் குடும்பத்துக்கு தலா 1000 ரூபாய் வீதம் தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ஊரடங்கினால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களுக்கு மட்டும் நிதியுதவி வழங்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க; கை குழந்தையுடன் பசியில் போராடிய பெண்ணுக்கு உதவிய இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details