சென்னை:மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்துக்கு, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். மேலும் டிபிஐ வளாகத்தில் அன்பழகன் சிலை அமைக்கப்படும் என நவம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் அமைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.