தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணிமேரி கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து பாதுகாப்பு - queenmarry College

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை காவலர்கள் பாதுக்காப்புடன் சென்னை ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Security to seal voting machines at queenmarry College
Security to seal voting machines at queenmarry College

By

Published : Apr 7, 2021, 4:36 PM IST

தமிழ்நாட்டில் நேற்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக தமிழ்நாட்டில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், மத்திய சென்னை- லயோலா கல்லூரி, தென் சென்னை- அண்ணா பல்கலைக்கழகம், வடசென்னை- ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை

இதேபோன்று தமிழ்நாட்டில் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு, சிசிடிவி மூலம் கண்காணிப்பு, ஜெனரேட்டர் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

பூட்டி சீல் வைக்கப்பட்ட அறை

இதில் ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயபுரம், துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மின் துண்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details