ஆயுதபூஜை, விஜயதசமி, தசரா போன்ற பண்டிகைகள் நடைபெறும் காலங்களில் அதிகளவிலான பயணிகள் வெளியூர் செல்லக்கூடும்.
இதனையொட்டி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆர்.கே.சிங் தலமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே காவல் துறையினர், வெடிகுண்டு தடுப்பு படையினர், மோப்ப நாய் உதவியுடன் கூட்டு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
கரோனா காலத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை என்பதால் பயணிகளுக்கான இருக்கைகள் தகுந்த இடைவெளியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் ரயில் பெட்டிகளில் மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
இதையும் படிங்க:மழைக்காலம்: தீயணைப்பு வீரர்கள் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!