சென்னை:நேற்று (டிச.21) சென்னை விமான நிலையத்தின் பின்பகுதியில் உள்ள அடையாறு ஆற்றுப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் சிலர் உள்ளே புகுந்து விட்டதாக கூறப்பட்டதுடன், அபாய எச்சரிக்கை மணிகளும் ஒலிக்கப்பட்டன. இதையடுத்து விமான நிலைய அதிரடிப்படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், சென்னை மாநகர போலீஸ் அதிரடி படையினர், விமான பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்புப் படை குழுவினர், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் உள்பட அனைவரும் பரபரப்பாக சென்னை விமான நிலைய ஓடு பாதைகளுக்கு பின்புறம், பழுதடைந்த பழைய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை தீயணைப்புப் படை வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து, தீயை அவசரமாக அணைத்தனர். அதோடு கீழே விழுந்து கிடந்த சிலரை, மருத்துவக் குழுவினர் அவசரம் அவசரமாக தூக்கி வந்து, முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கிகளுடன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த பரபரப்பு அடுத்த சில நிமிடங்களில் ஓய்ந்தது.