தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 28, 2020, 10:06 AM IST

ETV Bharat / state

மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரத்யேக முகக்கவசம்

சென்னை: நாடு முழுவதும் விமான நிலையங்களில் பணியில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பிரத்யேக முகக்கவசத்தை சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி வழங்கியுள்ளது.

security guards given special face masks by saveetha university
security guards given special face masks by saveetha university

சென்னை பூவிருந்தவல்லி அருகே செயல்படும் சவீதா மருத்துவக் கல்லூரியில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பிரத்யேக முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் மூலம் தயாரித்து வருகின்றனர்.

இதனை அண்மையில் அங்கு பார்வையிட வந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை துணை காவல் ஆய்வாளர் வினய் கல்ரா தங்கள் வீரர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து கரோனா வைரஸ் ஊடுருவ முடியாத தலை முதல் கழுத்துவரை பாதுகாக்கக்கூடிய பிரத்யேகமான 5 ஆயிரம் முகக்கவசங்கள் வடிவமைக்கப்பட்டன. இந்த முகக்கவசங்கள் இருமும்போதும், தும்மும்போதும் நோய் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை தனியார் சவீதா பல்கலைக்கழக வேந்தர் வீரையன் தலைமையில் துணை காவல் ஆய்வாளர் வினய் கல்ரா, கமாண்டர் ஆஷிஷ் குமார் ஆகியோரிடம் சென்னை விமான நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரத்யேக முகக் கவசம்

இதையும் படிங்க... முகக் கவசங்களை சுத்திகரிக்கும் கருவி - மதுரை இளைஞரின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details