தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியரசு தின விழா:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! - security Arrangements at Chennai Airport

சென்னை: குடியரசு தின விழா நாளை (ஜன.26) கொண்டாடப்படுவதையொட்டி, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை
சென்னை

By

Published : Jan 25, 2021, 8:31 PM IST

நாட்டின் 72ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் முக்கிய இடமான விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் வரும் அனைத்து வாகனங்களையும் விமான நிலைய காவல்துறையினர் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

விமான நிலையத்தில் நிற்கும் வாகனங்களை துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சோதனை செய்கின்றனர். விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, சரக்கு பாா்சல்கள் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சந்தேகப்படும்படி யாராவது விமான நிலையத்திற்குள் திரிந்துகொண்டு இருந்தால் அவரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணைக்கு பிறகு அனுப்பிவைக்கின்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

ABOUT THE AUTHOR

...view details