பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், 2020-2021 ம் கல்வியாண்டில் ஆசிரியர் அல்லாத பணியடங்கள் புதியதாக உருவாக்கப்படும் என மானியக் கோரிக்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.
484 அலுவலகப் பணியாளர் நியமனம் : பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு - பள்ளிக் கல்வித்துறை செயலாளர்
சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் 484 அலுவலக பணியாளர்களை நியமனம் செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் நிலை மேம்படவும், ஆசிரியர்களது நலன் மற்றும் பணப் பயன்கள் பெற்றளித்தலில் தொய்வற்ற நிலை ஏற்படுத்தவும், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தலில் முழு கவனம் செலுத்தவும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் நிரப்பட வேண்டும். பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உதவியாளர் பணியிடங்களில் 233 பேர் அதிகமாக உள்ளனர். இளநிலை உதவியாளர் 622 பேரும், பதிவறை எழுத்தர் 95 பேரும் தேவையாக உள்ளனர்.
இளநிலை உதவியாளர் தேவை உள்ள பள்ளிகளில் 233 உதவியாளர்களை பணியிடம் மாற்றம் செய்யலாம். அதனைத் தொடர்ந்து தேவையாக உள்ள 389 உதவியாளர், 95 பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அனுமதிக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தின் மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.