அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 100க்கு தொடர்பு கொண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்னை விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சொல்லிவிட்டு ஃபோனை துண்டித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையத்தில் தீவிர சோதனை செய்தனர்.