சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பதே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் ஒற்றை கோரிக்கையாக இருக்கிறது. கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற தொடர்ந்து போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக எதிர்க்கட்சி ஆக இருந்த பொழுது இவர்களின் கோரிக்கையை தீர்க்கப்படும் என நேரில் சென்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவாதம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களையப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 27 ஆம் தேதி 3 ஆவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் உடல் நேற்று (டிச.28) பாதிக்க தொடங்கியது. 29ஆம் தேதி காலைவரை 36 பேர் மயங்கியதைத் தொடர்ந்து மருத்துவமனையிலும், உண்ணாவிரதப் போராட்ட களத்தில் எட்டு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.