சென்னை:திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311-ன் அடிப்படையில், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி கடந்த 28ஆம் தேதி முதல் தொடர்ந்து இன்று(அக்.04) 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் போராட்டத்தின் போது, நிழல் தவருவதற்காக தார் பாய் கொண்டு பந்தல் அமைத்து அதன் கீழ் இருந்தனர். அதனை நேற்று இரவு காவல்துறையினர் அகற்ற வேண்டும் என கூறியதைத் தொடர்ந்து நிழலுக்காக போடப்பட்டிருந்த தார்ப்பாய்கள் அகற்றப்பட்டது.
தார்ப்பாய்கள் அகற்றப்பட்ட நிலையில், கொளுத்தும் வெயிலிலும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் இயக்க போராட்டத்தில், மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 260 ஆசிரியர்களும், களத்தில் 17க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விடுமுறைகளுக்குப்பின் இன்று(அக்.04) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கு செல்லவேண்டிய ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாமல், வகுப்புகளை புறக்கணித்தும், 'எண்ணும் எழுத்தும்' பயிற்சிக்கு செல்லவேண்டிய ஆசிரியர்கள் பயிற்சியை புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மற்ற ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக பயிற்சியின் இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். பணிக்கு வராதா ஆசிரியர்கள் குறித்த விவரங்களை, தமிழ்நாடு அரசு பதிவுசெய்தும் வருகிறது. அதன் அடிப்படையில் பணிக்கு வராவிட்டால் சம்பளம் என்ற விதியின் படி, அவர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்க வேண்டி 7-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.