சென்னை: தொடக்கக் கல்வித் துறையில் 2009 மே 31ஆம் தேதிக்கு முன்னர் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும் , ஜூன் ஒன்றாம் தேதிக்கு பின்னர் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ஊதியத்திலும் மாறுபாடு உள்ளது. எனவே, ஒரே கல்வி தகுதியுடன் பணி புரியும் இடைநிலை ஆசிரியர் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 27ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்பொழுது தங்களின் கோரிக்கை எப்போது நிறைவேற்றப்படும் என்பதை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் பிரச்னையைத் தீர்க்க குழு அமைத்து அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட், 'கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். மேலும் அவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றனர்.