தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல்கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகளில் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். நடைபெற்று முடிந்த இத்தேர்தலில் 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதனைத்தொடந்து 30ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ள தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் முடிவடையவுள்ளதால் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.