சென்னை:தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பொருட்களை சப்ளை செய்யக் கூடிய ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் முகவர்கள், அதன் கிளை நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், சென்னை உள்பட சில மாவட்டங்களில் 40 இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பாரிமுனை பகுதியில் உள்ள நல்ல முத்து மூக்கர் தெருவில் இயங்கி வருகிறது, பண்டாரி ஸ்டீல் எனும் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு பல்வேறு கிளை நிறுவனங்களும் உள்ளது. அந்த இடங்களில் எல்லாம் வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் பண்டாரி ஸ்டீல் குழுமத்தில் நிறுவனர் ஜெகதீசன் என்பவருக்கு தியாகராய நகரில் உள்ள இல்லத்திலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், இரண்டாவது நாளாக பத்து பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.