தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் பல்கலை துணைவேந்தர் தேர்வு: தேடல் குழுவை அமைத்தார் ஆளுநர் - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தரைத் தேர்வுசெய்ய தேடல் குழுவை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், மாநில ஆளுநருமான ஆர்.என். ரவி அமைத்துள்ளார்.

தேடல் குழுவை அமைத்தார் ஆளுநர்
தேடல் குழுவை அமைத்தார் ஆளுநர்

By

Published : Sep 30, 2021, 6:45 PM IST

சென்னை: கோயம்புத்தூரில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. இதன் துணைவேந்தராக 2018இல் நியமிக்கப்பட்ட குமாரின் பதவிக்காலம் வரும் நவம்பரில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரைத் தேர்வுசெய்வதற்காக இந்திய வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் லட்சுமண் சிங் ரத்தோர் தலைமையில் மூன்று பேர் அடங்கிய தேடல் குழுவை அமைத்து வேந்தர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுவில் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அப்துல் கரீம், ஆசிய - பசிபிக் தேங்காய் மேம்பாட்டுக் கழக முன்னாள் சிறப்பு இயக்குநர் பொன்னையா ரத்தினம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணைவேந்தர் பதவிக்குத் தகுதியான மூன்று நபர்களைப் பரிந்துரைசெய்து ஒரு மாத காலத்துக்குள் ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிக்க தேடல் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் ஆர்.என். ரவி புதிய துணைவேந்தரைத் தேர்வுசெய்து அறிவிப்பார்.

இதையும் படிங்க:இயல்பைவிட இந்தாண்டு பருவமழை அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details