தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் செலுத்தாததால் மதுவந்தியின் வீட்டிற்குச் சீல்வைப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் கடன் செலுத்தாததால் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தியின் வீட்டை வங்கி அலுவலர்கள் சீல்வைத்தனர்.

மதுவந்தியின் வீட்டிற்கு சீல்
மதுவந்தியின் வீட்டிற்கு சீல்

By

Published : Oct 14, 2021, 10:20 AM IST

சென்னை: பிரபல திரைப்பட நடிகரான ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தி பாஜகவில் செயற்குழு உறுப்பினராகவும், துணை நடிகையாகவும் இருந்துவருகிறார். இவர் 2016ஆம் ஆண்டு இந்துஜா லைலேண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.

ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் கடனை மதுவந்தி செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது. இதனால் பைனான்ஸ் நிறுவனம் மெட்ரோ பாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வீட்டை சீல்வைக்க ஆணை பெற்றது.

நீதிமன்றம் உத்தரவின்பேரில் தேனாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ரத்தினகுமார், வழக்கறிஞர் வினோத் ஆகியோர் மதுவந்தியின் வீட்டைப் பூட்டி சீல்வைத்தனர். அந்த வீட்டின் சாவி பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க:பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே பைக் வீலிங் செய்த இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details