தென் தமிழ்நாட்டில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை 3 முதல் 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகளின் சீற்றம் காணப்படும். தென்மேற்கு திசையிலிருந்து 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும்.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னை: அரபிக்கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இரண்டு நாட்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
fishermen
எனவே, ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தென்மேற்கு திசையிலிருந்து 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மத்திய, தென் மேற்கே அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதி மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.