சென்னை: குன்றத்தூர் அடுத்த தண்டலம் பகுதியை சேர்ந்தவர் கௌதம்(26). பல் மருத்துவராக உள்ள இவர் திருமுடிவாக்கத்தில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த கிளினிக்குக்கு நேற்று (டிசம்பர் 23) வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கஞ்சா கர்ணா(என்ற) கருணாகரன் மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியதில் கௌதமின் கை, மற்றும் கழுத்து பகுதி தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதையடுத்து மயங்கினார்.
குன்றத்தூர் அருகே மாமுல் தர மறுத்த பல் டாக்டருக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
சென்னையின் குன்றத்தூர் அருகே மாமுல் தர மறுத்த பல் டாக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அங்கிருந்தவர்கள் கௌதமை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ள செந்தமிழ் செல்வன் பல் மருத்துவரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பணம் கேட்டதாகவும் தர மறுத்ததால், அவரது கூட்டாளிகளை அனுப்பி வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செந்தமிழ் செல்வன், மற்றும் கருணாகரன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களின் தினக்கூலியை இடைக்காலமாக உயர்த்த உத்தரவு: நீதிமன்றம்