தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறைச்சிக் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு... அடையாளம் தெரியாத கும்பல் வெறிச்செயல்! - காவல்துறை விசாரணை

சென்னை: பம்மல் பகுதியைச் சேர்ந்த இறைச்சிக் கடை உரிமையாளரை, மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் கத்தியால் வெட்டி விட்டு, தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Scythe cut for butcher shop owner; Unidentified gang mania!

By

Published : Jul 18, 2020, 12:56 AM IST

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காமராஜபுரம் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருபவர், இஸ்மாயில்(45). இந்நிலையில் வழக்கம்போல் நேற்றும் (ஜூலை 17) அவரது இறைச்சிக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், இஸ்மாயிலை கத்தியால் சரமாரியாக, வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இஸ்மாயிலை மீட்ட அருகிலிருந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் காவல் துறையினர், குற்றவாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், ஒருவரைக் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத்.

ABOUT THE AUTHOR

...view details