திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் கீழ்ராவந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள சிற்பக்குளம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகர்மலை யானை சிற்பம் ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சிற்பக்குளம், அழகர்மலை யானை சிற்பம்: நினைவு சின்னங்களாக அறிவிப்பு! - தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள்
சென்னை: கீழ்ராவந்தவாடி சிற்பக்குளம், அழகர்மலை யானை சிற்பம் ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், "அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டம், இளையபெருமாள் நல்லூர் கிராமத்திலுள்ள அழகர்மலை யானை சிற்பம், திருவண்ணாமலை தண்டராம்பட்டு வட்டம் கீழ்ராவந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள சிற்பக்குளம் ஆகியவை 1966ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள், எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் உட்பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களாக அறிவிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள்!