சென்னை:சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு ஆய்வுக் கூட்டம் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கடத்தல் தடுப்புப் பிரிவின் காவல்துறை இயக்குனர் ஜெயந்த் முரளி, காவல்துறை தலைவர் தினகரன் மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைப்பற்றப்பட்ட கோவில் சிலைகளை அந்தந்தக் கோவில்களில் ஒப்படைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் பல சிலைகள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் பதுக்கப்பட்டிருக்கும் சிலைகளை மீட்க செயல்திட்டம் வகுக்கப்பட்டது.