தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பதிலி எழுத்தாளர்- நியமனத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் - பதிலி எழுத்தாளர் நியமனம்

தேர்வெழுதும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது.

Scriber appointment, court accept state regulations, MHC
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பதிலி எழுத்தாளர் நியமனத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம்

By

Published : Sep 22, 2021, 3:59 PM IST

சென்னை:ஆசிரியர் தேர்வு வாரியம், 2019ஆம் ஆண்டு ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள கண்பார்வையற்றவர்களுக்கு, தேர்வு எழுத உதவியாளர்களை நியமிக்க கோரியும், தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்க கோரியும், கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம் சார்பில் 2019ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கண்பார்வையற்றவர்கள் தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்கவும், கூடுதல் நேரம் ஒதுக்கவும், அதுசம்பந்தமாக வழிகாட்டு விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வில் இன்று(செப். 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வை மாற்று திறனாளிகளுக்கு உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுத்து நேற்று (செப். 21) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்து தேர்வுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு, அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதேசமயம், தேர்வர்களைவிட உதவியாளர்களின் கல்வி தகுதி குறைவாக இருக்க வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசாணையை அமல்படுத்தும்போது உள்ள இதுபோன்ற சிக்கல்கள் கலையப்பட்டு, திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க:தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்காலத் தடை - ஆசிரியர் தேர்வு வாரியம்

ABOUT THE AUTHOR

...view details