கோவை : கடந்த 2020ஆம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் வினோத்குமார் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வந்த விஜயகுமார், ஜப்பான் என்கிற ஹரிகரன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இருவரும் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோவை மாநகர மத்திய சரக காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார், விக்னேஷ், காவலர்கள் ஞானவேல், மாதேஸ்வரன்,சுகந்த ராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள், சாட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.