இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை: சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள லியோ முத்து உள் விளையாட்டு அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அரங்கில் இருந்த மாணவர்கள் தங்களது செல்போன்களில் டார்ச் லைட் அடித்து ஆரவாரம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரமுத்துவேல், "நான் படித்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன். பல ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரியில் படித்த எனது நண்பர்களையும் சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. விண்வெளி துறையில் இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இன்ஜினியரிங் மாணவர்கள் எந்த பிரிவில் படித்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக சிறந்த எதிர்காலம் உள்ளது. மாணவர்கள் லட்சியத்துடன் படித்து முன்னேற வேண்டும்.
இதையும் படிங்க: சாதிவாரி கண்ணக்கெடுப்பு: சமூகநீதியை தமிழ்நாட்டிற்குள் தடுப்பது எது? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!
அரசு வேலைகள் மற்றும் அறிவியல் ஆய்வுகளில் தென்னிந்தியர்களை வட இந்தியர்கள் அதிக அளவு வேலையில் உள்ளனர். வட இந்தியர்கள் தேர்வில் தோல்வியடைந்தாலும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்து தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று அரசு பணிகளில் இடம்பெற்று விடுகின்றனர். அதனால் அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி பணிகளிலும் அதிக அளவு உள்ளார்கள்.
தென்னிந்திய மக்களை பொருத்தவரை ஒரு முறை, இரண்டு முறை தோல்வி அடைந்தால் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்யாமல் வேறு துறைகளுக்கு சென்று விடுகிறார்கள். அதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக உள்ளார்கள். தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறலாம், அதை தென்னிந்தியர்களும் செய்ய வேண்டும்.
இந்தியாவில் விண்வெளித்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் எதிர்காலத்தில் செய்யப்பட உள்ளது. சந்திரயானை நிலாவுக்கு அனுப்பியது வெறும் தண்ணீரை தேடுவதற்கு மட்டுமல்ல, அங்கு மனிதர்களை அனுப்புவது உட்பட்ட ஏராளமான திட்டங்களை வைத்திருக்கிறார்கள். மேலும் விண்வெளி சுற்றுலா போன்ற பல்வேறு வாய்ப்புகள் இதன் மூல்ம் உருவாகி உள்ளது. விண்வெளி துறையில் இந்தியா முன்னோடி நாடாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் நந்தன் சுவரைத் தகர்த்து வாசலைத் திறப்பாரா ஆளுநர் ரவி? - திருமாவளவன் கேள்வி!